வான மங்கை நாண...
வெட்கம் உச்ச மடைந்து...
இரவியின் வெப்பத்தை விழுங்கும் பொழுது...
சூரியனும் சாரலும் சங்கம் வைக்க....
வெள்ளை நிறம் உள்ளம் திறக்க...
வெளியே வந்ததோ ஏழு வண்ணங்கள்..
ஆகாய நங்கை சிவந்த பொழுதை...
கலைந்த கதிரவனின் கதிர்கள்...
காட்டிகொடுத்ததோ வானவில்லாய் !
எனக்குள் நிறங்கள் பூத்ததை...
இயற்கைக்கு சொல்லியது யார்?
என்னுடன் போட்டி போட...
வானம் தூவிய வண்ண கலவை
லேசாய் சாய்ந்ததோ வில்லாய்!
அந்த அழகின் கோலம்...
இந்த அழகிய நிமிடங்களில்......
பதித்தேன் என் அலை பேசி திரையில்!
கல்வெட்டு எழுத- இது
கண்ணகி காலம் அல்லவே !- என்
இனிய எதிரியை - பகிர்கிறேன்
இந்த கணினியின் முகவர்களிடம்!
இந்த கணினியின் முகவர்களிடம்!