Showing posts with label Poems (In Tamil Language). Show all posts
Showing posts with label Poems (In Tamil Language). Show all posts

Saturday, April 23, 2016

கனவுகள்

கனவுகளை எந்த கண்களும் பார்பதில்லை ! - அதில்
உணர்வுகள் மட்டுமே ..

தமிழ்ச்சங்கம்

இன்றைய நடைமுறையில் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது மதுரையில் அல்ல !
வெளிநாடு வாழ் தமிழர்கள் வாழும் ஊர்களே !  

காதல் வித் காபி!

ஆண் பெண் இடையே வரும் காதல் மட்டுமே  காதல் அன்று !
காலை பருகும் காபியிடம் வரும் அன்யோன்யமும் காதலே !
எங்கும் காதலே!

Sunday, April 17, 2016

பிறப்பு

எல்லா குழந்தைகளும் வரம்  வேண்டி பிறந்தவர்கள் அல்ல !
ஏறாளம்,  துணை வேண்டிய பொழுதில்   மலர்ந்தவர்களே !  

Wednesday, April 13, 2016

நட்சத்திரங்கள்

கருப்பு போர்வைக்குள் வெளியே எட்டி பார்க்கும் சில்  வண்டுகள் ...வானத்தின் நட்சத்திரங்கள் !

Monday, April 4, 2016

கிறுக்கல்கள்

எனது கிறுக்கல்கள்! எனது உரிமை !

Monday, December 7, 2015

சென்னை வெள்ளம் !

என்  மெய் சிலிர்கிறது!!!
மேனியெல்லாம் புள்ளரிகிறது !!!
மழையே நீ மண்டியிட்டு தோற்றுபோனாய்
மாண்புமிகு மனிதநேயதிடம் !!!

மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியதைவிட
மழைவெள்ளத்தில் சிக்கிய மனிதர்களைவிட
மீட்டு  எடுக்க ஓடோடி வந்த மக்கள், அல்ல
அலைஅலையாய் வந்த  மனித தெய்வங்கள் !

மனித அலையின் ஆர்பரிப்பு வேகத்திற்கு
ஈடுகொடுக்க இயலாத இயற்கையும்,
ஈவு இரக்கமின்றி கொட்டி தீர்த்த வானமும்
வாயடைத்து போனது !


திறண்டு வந்த வெள்ளத்தை பார்த்து,
இயற்கையை வெல்ல யாராலும் முடியாது -
என்று கூக்குரலிட்ட யாவரும் !-மறந்து
போனார்கள் அந்த வரியை !


கூடிவந்த கோடி கைகளை கண்டு,
மண்டி வந்த மனித சக்தியை பார்த்து,
மாண்டு போகவில்லை மனிதம் - என்று
மருண்டு ஓடியது வெள்ளம் ! மயங்கி நின்றது ஒரு கூட்டம் !

இதில்  சில கருப்பு ஆடுகளையும் -
இனம்  கண்டுகொண்டது மக்கள் உள்ளம் !





Saturday, November 7, 2015

இலையுதிர் .......(Autum)

வசந்த காலத்தில் பூக்களை பெற்றடுக்க....

உதிர்க்கும் உரமே இலையுதிர் ....

பூ பெய்தால் (பூபெய்தால் ) ... கொண்டையில் கோலம்

இலை பெய்தால் - மண்ணில் கோலம்

பருவ மாற்றம் உருவம் மாற்றலாம் ....

அரிதாரம் கலைந்தாலும் ... - நீ மட்டுமே அழகி !

Sunday, September 27, 2015

Digital குப்பை

தூக்கி எறிந்த அழுகிய தக்காளி
மண்ணுள் மக்கி - மீண்டும் முளைத்து 
செடியாகி கனி தருகிறது !
வீணாய் போன Electronic Gadget 
மண்ணை மக்க வைத்து 
பூமியை மாசுபடுத்துகிறது !  

Tuesday, September 22, 2015

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம் ..
மெல்லிய சாரலாய் தூறல்..
தூவானம் சிந்துது ..
சர்கரை துளிகளை..
சுவைக்க அல்ல- சிலிர்க்க !!

Monday, September 21, 2015

மரணம்

மரணம் ஏன் இவ்வளவு வலிக்கறது ?
இறந்துகொண்டு இருப்பவர்களுக்கு இல்லை ...
இழப்பவர்களுக்கு ....

Sunday, August 10, 2014

Change Is The Only Constant(dot)



மேலே தூரத்து வெளியில் 
ஒளிரும் அண்டத்தின் மெர்குரி! 
கீழே குறுகிய தெருவின் 
இருள் விரட்டும் சோடியம்! 
மெர்cஉர்யும்  கரும் புள்ளியாகி 
கரைந்து போகும் !
சோடியமும் உயிரிழந்து 
இருள் கவ்வி நிற்கும் !

மாற்றம் ஒன்றே மாறாதது !

Friday, June 6, 2014

கவிதை ???

மனம் நினைத்தால்  ...
மனம் நிறைந்தால் ...
மனம் வலித்தால் ...
மனம் மகிழ்ந்தாள்...

சொற்கள் சுந்தரமாகி
ஒய்யார நடை பழகி
வார்த்தைகள் வண்ணம் பூசி
உருவம் கண்டு
உவமை கொண்டு
உதிர்வது   கவிதையோ ?

அல்ல !!!

அர்த்தம் அறவே இன்றி
சொற்கள் பொருளே இன்றி
உளறல் உச்சமாகி
இசையின் உயிரோடு
இளமை நடையோடு
ஹைக்கூ மொழியோ ?

(why this கொலவெறி YES கொலவெறி NOT கொலைவெறி )

செந்தமிழ் சிற்பமோ  அல்ல  புலம்பலின் பிம்பமோ ?

ரசிகனுக்கு ரசம் கிட்டும் வரை ....

வார்த்தைகள் வறண்டு போகும்வரை ...

வருவதோ கவிதை !!!










             

Friday, August 31, 2012

அம்மாவின் சமையல்....


ஆண்டுகள் பல கடந்தாலும் ..
கண்டங்கள் பல கண்டு 
continent சுவைகள் உண்டாலும்... 
அடி தொண்டையில் ஊரும் - உன்
அருமையான அன்பு கலந்த அமுதின் ருசி   !


Dedicated to my lovely mom on her B'Day...

Saturday, August 4, 2012

உதிரும் குரலோவியம் ......


உன்.....
செவ்விதழ் சிந்தும் சொற்களை - என் 
இதய ஏட்டில் ஏற்றினேன் !
கவிதைச் சரங்களாகி கைகளில் -  வந்தது
உன் உதிரும்   குரலோவியம்  !
உரைக்கின்ற சொல்லுக்கும் 
உயிர் கொடுக்கும் நீயொரு - கவித் தாய் ! 
என் உயிருள்ள கவிதையே !

Monday, July 16, 2012

களவாடிய பொழுது......


ஒற்றை நூலில் உயிர் தாங்கி
ஒரு காலில் தவமிருந்து
ஊஞ்சலாடும் மலரே !
மகரந்த மணம் பரப்பி
மங்கை நீ தூது சமைக்க !
உயிர்  தேனும்  உண்மை தேனும்
உன்னுள் நான் தேட !
களவாடிய பொழுதுகள்  - ஆம் !
நானோ உன்னிடம்  கொள்ளையடிக்க
நீயோ என்னிடம் கொள்ளைபோக !



(Got the shot @ evening walk) Inspired By the Pic to pen this poem..

Sunday, July 15, 2012

Haiku..

கொஞ்சம் கொஞ்சம் வழிகள் கேட்டால் ...
கொஞ்சும் கொஞ்சும் வலிகள் தந்தாள் ...
வஞ்சி அவள் என் நெஞ்சில் நின்று .....



Inspired By Karky'S "கொஞ்சம்" from "Naan E".......

Moments.........



The moment of removing hurting clip from the hair....
The water we drink when we are really thirsty....
The breeze we feel when we are burning out of hot sun....
The place we get to sit after prolonged painful standing...
The candle light power when we ran out of electricity....
The moment we receive the long awaiting call...
The moment we receive the most awaited email...
The smile from strangers when we go for a walk with depressed mood....
The food we get when we starve....
The moment of changing to pajamas from day long formal suit....
The moment we know the result of the tough exam result as "PASS" ....
The moment we receive the surprise gift which was on our wish list since long....
.
.
.
.
.
.
.
.

Fill the space ....The most delighted moments...........



Saturday, February 4, 2012

Blossom Of Sun Shines IN Rain..AS RainBOW..Bowl Of Colors....

                                         வான மங்கை நாண...
                                         வெட்கம் உச்ச மடைந்து...
                                         இரவியின் வெப்பத்தை விழுங்கும் பொழுது...
                                         சூரியனும் சாரலும் சங்கம் வைக்க....
                                         வெள்ளை நிறம் உள்ளம் திறக்க...
                                         வெளியே வந்ததோ ஏழு வண்ணங்கள்..
                                         ஆகாய நங்கை சிவந்த பொழுதை...
                                         கலைந்த கதிரவனின் கதிர்கள்... 
                                         காட்டிகொடுத்ததோ வானவில்லாய் !
  
                                        எனக்குள் நிறங்கள் பூத்ததை...
                                        இயற்கைக்கு சொல்லியது யார்?
                                        என்னுடன் போட்டி போட...
                                        வானம் தூவிய வண்ண கலவை
                                        லேசாய் சாய்ந்ததோ வில்லாய்!
                                        அந்த அழகின் கோலம்...
                                        இந்த அழகிய நிமிடங்களில்......
                                        பதித்தேன் என் அலை பேசி திரையில்!
                                        கல்வெட்டு எழுத- இது
                                        கண்ணகி காலம் அல்லவே !- என்
                                        இனிய எதிரியை - பகிர்கிறேன்
                                        இந்த கணினியின் முகவர்களிடம்!  

Sunday, September 4, 2011

Keep Smiling...

சிறு மழை துளி அளவு மகிழ்ச்சியும்
என்னை சிறு குழந்தையாக
சிரிக்க வைப்பதால்
சந்தோஷ குடைக்குள் - நான் !
பெரும் மழை துன்பம்
என்னை நனைப்பதில்லை !