கடற்கரையில் அந்த மணல்வெளியில்
எங்கெங்கு காணினும்
மனிதனின் சுவடுகள் - !
காற்றில் கரையும் - அந்த
காலடி தடங்கல் - சொல்லும்
காவியங்கள் கணக்கில் அடங்காதது !
உலகின் அத்தனை உறவுகளும்
ஒரு முறையாவது
கால் பதித்திருக்கும் !
அறிவியல் உலகம்
ஆயிரம் படைப்புக்களை
வியத்தகு விந்தைகளை - வித்திட்டுருந்தாலும் !
அலைகடல் வீதியிலே
அன்ன நடையிட்டு
தென்றலோடு உறவாடுவது
தெவிட்டாத இன்பம் !
No comments:
Post a Comment