Friday, June 6, 2014

கவிதை ???

மனம் நினைத்தால்  ...
மனம் நிறைந்தால் ...
மனம் வலித்தால் ...
மனம் மகிழ்ந்தாள்...

சொற்கள் சுந்தரமாகி
ஒய்யார நடை பழகி
வார்த்தைகள் வண்ணம் பூசி
உருவம் கண்டு
உவமை கொண்டு
உதிர்வது   கவிதையோ ?

அல்ல !!!

அர்த்தம் அறவே இன்றி
சொற்கள் பொருளே இன்றி
உளறல் உச்சமாகி
இசையின் உயிரோடு
இளமை நடையோடு
ஹைக்கூ மொழியோ ?

(why this கொலவெறி YES கொலவெறி NOT கொலைவெறி )

செந்தமிழ் சிற்பமோ  அல்ல  புலம்பலின் பிம்பமோ ?

ரசிகனுக்கு ரசம் கிட்டும் வரை ....

வார்த்தைகள் வறண்டு போகும்வரை ...

வருவதோ கவிதை !!!










             

No comments: